எட்டாவது தளத்திலிருந்து மகளுடன் கீழே குதித்த பெண்: நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
274Shares

பிரான்ஸில் தாய் ஒருவர் எட்டாவது தளத்திலிருந்து தனது மகளுடன் கீழே குதித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Pantin மற்றும் Aubervilliers பகுதிக்கு இடையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பெண் தான், தனது இரண்டு வயது மகளுடன் இவ்வாறு குதித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதோடு, மேலிருந்து அந்த பெண் குதித்த போது கீழே சென்று கொண்டிருந்த நபர் மீது விழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள பொலிசார் இது ஒரு தற்கொலை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்