பிரான்ஸ் ஹீரோவான பொலிஸ் அதிகாரிக்கு தேசிய கௌரவம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்காக தன் உயிரையே பணயம் வைத்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியான Lt Col Arnaud Beltrame (44)க்கு தேசிய கௌரவம் அளிக்கப்பட உள்ளது.

அவரது உடல் பாரீஸ் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு Les Invalidesஇல் அவரது அடக்க ஆராதனை நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அந்த ஆராதனைக்கு தலைமை தாங்க இருக்கிறார்.

Lt Col Arnaud Beltrameக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக கூடும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் முன்னிலையில் ஜனாதிபதி அவருக்கு புகழ்ந்துரை வாசிக்க இருக்கிறார்.

ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப்பின் Lt Col Arnaud Beltrameக்கு பிரான்ஸின் உயரிய விருதான Legion d'honneur என்னும் விருது வழங்கப்பட உள்ளது. அதற்குப்பின் அவரது உடல் Carcassoneக்கு திரும்ப கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

ஏற்கனவே பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, “அசாதாரணமான தைரியத்தையும் தன்னலமற்ற தன்மையையும் காட்டியபின் Arnaud Beltrame ஒரு ஹீரோவாக உயிரை விட்டிருக்கிறார், மொத்த தேசத்தின் மரியாதைக்கும் புகழ்ச்சிக்கும் தகுதியானவர் அவர்” என்று புகழ்ந்துரையாற்றியிருக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers