ஏப்ரல் முதல் பிரான்சில் ஏற்படப்போகும் மாற்றங்கள்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பிரான்சில் ஏப்ரல் மாதம் முதல் அமுலாக்கப்படவுள்ள மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

Energy cheques

சிறிய வருமானம் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் மின்கட்டணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய முறையே Energy cheques ஆகும்.

ஆண்டு தொடக்கத்திலேயே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரும் ஏப்ரலின் தொடக்கதிலிருந்துதான் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் பலனைப் பெறப் போகிறார்கள்.

சமூக கட்டண திட்டத்திற்கு (social tariff) மாற்றாக வரக் கூடிய இந்தக் காசோலைகள் (energy cheques) தானியங்கி தபால் மூலம் தானாகவே பயனாளர்களுக்கு அனுப்பி வைக்கப் படும்.

பெற்றோர்களுக்கான புதிய ஆலோசனைகள்

ஏப்ரலின் தொடக்கத்தில் குழந்தைகளுக்கான சமீபத்திய மருத்துவ ஆலோசனைகள் கொண்ட அரசாங்கத்தின் புதிய "சுகாதார புத்தகம்" (அல்லது பிரெஞ்சு மொழியில் "கார்னெட் டி சாண்டே") வெளியிடப்படும்.

அந்த இலவச புத்தகம் பாரம்பர்யமாக மருத்துவமனையின் பிரசவகால அறை ஊழியர்கள் அல்லது மருத்துவர் மூலமாகவோ விநியோகிக்கப்படும்.

அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள், குடும்பங்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 2006ம் ஆண்டின் புதிய பதிப்பு இதுவாகும்.

மின்னணு வாடிக்கையாளர் சேவை

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், பிரான்ஸ் எதிர்காலத்தை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைப்பதை கவனிக்கத் தொடங்குவீர்கள்.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை ஊழியர்களுடன் கையாளும் போது, பாரம்பரிய கையெழுத்துக்கு பதிலாக ஒரு மின்னணு கையொப்பத்திற்காக நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

நிதித் துறையில் மின்னணு படிவங்கள் மற்றும் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒரு பகுதியாகும்.

குடும்ப நன்மைகள்

பிரான்சில் குடும்ப நலன்களை பெறும் குடும்பங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து சலுகைகளின் உதவித் தொகைகளின் மதிப்பு அதிகரிக்கப்படும், சிறிதளவில் ஆரம்பித்தாலும் இதுவும் ஒரு நல்ல முன்னேற்றமே.

கடந்த 2017 ஆம் ஆண்டின் பணவீக்க அளவுகளின் படி பார்க்கையில் குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப நலன் உதவி தொகை ஒரு சதவிகிதமாவது உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதாவது 67,542 யூரோக்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மாத உதவித்தொகை 129.86 யூரோக்களிலிருந்து 131.15 யூரோக்களாக உயர்த்தப்படும்.

Les Echos-ன் கூற்றுப்படி பணவீக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பல சமூக நலன்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்ககூடும்.

அதாவது, மீண்டும் பள்ளிக்கு வரும் உதவி தொகை மற்றும் தொடக்க கால குழந்தை பருவ நலன்கள் (PAJE) 1 சதவிகிதம் அதிகரிக்கலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers