பிரான்சிலிருந்து வெளியேற விரும்பும் புகலிடம் கோருபவர்: சோகப் பின்னணி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

புகலிடம் கோரி பிரான்சுக்கு வந்து அங்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் ஏமாற்றமே மிஞ்சியதால் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பிரான்சில் புதிய புலம்பெயர்தல் மற்றும் புகலிடச் சட்டம் இயற்றுவதற்காக ஆலோசனைகள் நடந்துவரும் நிலையில் சூடானைச் சேர்ந்து மூவர் உட்பட நான்கு அகதிகள் தங்களது MPக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரான்சுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமானதாக உள்ளது என்பதைக் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.

தாங்கள் வெகு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், தங்களுக்கென்று உரிமைகள் எதுவும் இல்லையென்றும், பிரெஞ்சு மொழி வகுப்புகளும் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நாட்டில் நமக்கு எதிர் காலம் உள்ளதா இல்லையா என்று தெரியாமலே காத்திருப்பதும், இந்த புதிய நாட்டில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமா என்பது தெரியாமலே காத்திருப்பதும் மனோரீதியாக தங்களை மிகவும் பாதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், புலம்பெயர்தலை எதிர்க்கும் பிரித்தானியர்கள், புலம்பெயர்வோர் தாங்கள் முதலில் வந்திறங்கிய நாட்டிலேயே இருக்காமல் ஏன் மிகத் தொலைவில் இருக்கும் எங்கள் நாட்டுக்கு வருகிறார்கள் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்புவதுண்டு. (உண்மையில் பிரித்தானியா மிகக் குறைவான அளவிலேயே புகலிடக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுகிறது என்பது வேறு விடயம்).

சுமார் பத்தாண்டுகளாகவே புலம்பெயர்ந்து பிரான்சுக்கு வந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக பிரான்சின் வட பகுதியிலுள்ள Calais என்னும் பகுதிக்கு செல்வதுண்டு. அங்கிருந்து கடல் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவது அவர்கள் நோக்கம்.

இதற்கு முக்கியக் காரணம் பிரான்ஸ் புதிதாக புலம்பெயர்ந்து வருவோருக்கு வேலையைத் தேடிக்கொள்வதிலோ குடியமர்வதிலோ பெரிய உதவிகள் எதையும் செய்வதில்லை என்பதுதான் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த சிலர் மூன்றாண்டுகளாகியும் இன்னும் வேலை கிடைக்காமல் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருப்பதுதான் இந்த கடிதத்தின் உச்சகட்டம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers