பிரான்சில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இனி உடனடி அபராதம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் சாலையிலோ அல்லது பொது இடங்களிலோ பெண்களை கிண்டல் செய்தாலோ பாலியல் சீண்டல்கள் செய்தாலோ உடனடியாக குறைந்தபட்சம் 90 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

அமெரிக்க மெகா பட அதிபரான Harvey Weinsteinமீது ஏராளமான பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரான்சிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

இதன்விளைவாக சாலையிலோ அல்லது பொது இடங்களிலோ பெண்களை கிண்டல் செய்தாலோ பாலியல் சீண்டல்கள் செய்தாலோ உடனடியாக குறைந்தபட்சம் 90 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

இதை அரசின் செய்தித் தொடர்பாளரான Benjamin Griveaux உறுதி செய்துள்ளார்.

அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு விரைவாக அபராதத் தொகை செலுத்துகிறார் என்பதைப் பொருத்து 90 யூரோக்கள் முதல் 750 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சமீபத்தில் ஒரு நபர் 11 வயது சிறுமி ஒருத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டபோது, அவளது சம்மதத்தின்பேரில்தான் பாலுறவு கொண்டதாக நீதிமன்றத்தில் அந்தச் சிறுமி கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்தே, திங்கட்கிழமையன்று, பாலுறவு கொள்வதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கு ஒரு பெண் குறைந்தது 15 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று வயது நிர்ணயிக்கும் திட்டத்தை அரசு உறுதி செய்தது.

அதேபோல் பாலியல் புகார்களுக்கு அபராதம் விதிக்கும் இந்தச் சட்டமும் இம்மாத இறுதியில் அமுலுக்கு வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers