பிரான்ஸ் மலைகளையே கிரங்கடிக்கும் சுட்டி சிறுவன்: பாராசூட்டில் வித்தை காட்டும் வீடியோ

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இருக்கும் மலைகளை சுட்டி சிறுவன் தன்னுடைய பாராசூட் மூலம் சுற்றி வருவது தொடர்பான வீடியோ பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

Noah சிகாகோவில் இருக்கும் iFLY indoor skydiving-ல் பயிற்சி பெற்றுள்ள இந்த சிறுவன், பிரான்சில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வருகிறான்.

பிரான்சில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால், அங்கிருக்கும் மலைகள் பார்ப்பதற்கு மிக அழகாக பனிகள் உறைந்து கட்சி அளிக்கின்றன.

இங்கு சாகச விளையாட்டுகளான பனிச்சறுக்கு மற்றும் பாராகிளைடிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். பார்ப்பதற்கு மலைகள் எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதில் அந்தளவிற்கு ஆபத்தும் இருக்கிறது.

திடீரென்று பனிச்சரிவு ஏற்படும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படலாம்.

இப்படி இருக்கும் மலைகளில் Noah தன்னுடைய திறமையால அங்கிருக்கும் மலைகளுக்கு இடையில் பாராசூட்டை பயன்படுத்தி சுற்றி வருகிறான்.

இது குறித்து Noah, மலைகளில் விளையாடுவது மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளான். சிறுவன் தொடர்பான வீடியோ இணையத்தி உலா வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்