பிரான்சில் இந்த மாதம் முதல் வந்துள்ள மாற்றங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மார்ச் 1ம் திகதி முதல் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

சிகரெட் விலை

சிகரெட் பாக்கெட் ஒன்றின் விலை சராசரியாக ஒரு யூரோ வரை அதிகரித்துள்ளது.

அதாவது புகை பிடிப்பவர்கள் இனி ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 8 யூரோக்கள் செலுத்த வேண்டும். பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronஇன் பதவிக் காலம் முடிவதற்குள் இது 10 யூரோக்கள் வரை உயரலாம்.

சமையல் எரிவாயுவின் விலை

சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது, மார்ச் 1 முதல் எரிவாயு நிறுவனமான Engie, எரிவாயு விலைகளைக் குறைத்துள்ளது, இதனால் பிப்ரவரியில் இருந்த விலையைவிட மார்ச்சில் 3 சதவிகிதம் விலை குறையும்.

சமையல் எரிவாயுவின் விலை 1 சதவிகிதமும், சமையலுக்கும் தண்ணீர் சுடவைப்பதற்கும் எரிவாயுவை பயன்படுத்துபவர்களுக்கு 1.8 சதவிகிதமும் விலை குறையும்.

வீடுகளில் குளிரைப் போக்குவதற்காக எரிவாயுவை பயன்படுத்துபவர்களுக்கு 3 சதவிகிதம் வரை விலை குறையும்.

வீட்டு வாடகை

மார்ச் 1 முதல் Bordeaux நகரில் Airbnb போன்ற நிறுவனங்கள் மூலம் வீடு வாடகைக்கு விடுபவர்கள் முதலில் அரசு அலுவலகங்களில் பதிவு செய்யவேண்டும்.

பிரான்சில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் அதிகபட்சமாக 120 நாட்கள் வரை மட்டுமே தொடர்ந்து வாடகைக்கு விட முடியும்.

அதற்குமேல் வாடகைக்கு விடவேண்டுமானால் தங்களது சொத்து வர்த்தக ரீதியானது என அறிவிக்க வேண்டும். இந்த சட்டத்தைப் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. இவர்களைக் குறிவைத்துத்தான் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

காற்று மாசு எதிர்ப்பு ஸ்டிக்கர்கள்

காற்று மாசு எதிர்ப்பு ஸ்டிக்கர்களின் விலை குறைந்துள்ளது, ஒரு கார் எவ்வளவு பழமையானது/எந்த அளவிற்கு மாசு ஏற்படுத்தக்கூடியது என்பதைக் காட்டுவதற்காக இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

இதற்கு முன் 3.70 யூரோக்களாக இருந்த இந்த ஸ்டிக்கர்களின் விலை இனி 3.11 ஆக இருக்கும்.

Daylight Saving Time

அடுத்ததாக ஒரு இனிமையான செய்தி. இனி மாலையில் வெகு நேரம் பிள்ளைகளுடன் விளையாடலாம், துணையுடன் வெளியே செல்லலாம், ஒரு நீண்ட மாலை வாக்கிங் செல்லலாம்... ஆம் Daylight Saving Time பிரான்சில் அதிகாரப்பூர்வமாக மார்ச் 25 முதல் தொடங்க இருக்கிறது.

எனவே கடிகார முட்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தி வைக்க மறக்க வேண்டாம். இனிய மாலை நேரத்துக்கு வாழ்த்துக்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்