பிரான்சில் உலக தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட Resort

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

தெற்கு பிரான்சில் ஏற்பட்ட நிலச்சரிவினால் Ski Resort ஒன்று உலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் Occitanie பகுதியில் உள்ள Monts d’Olmes என்ற ரிசார்டே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2000 பேர் அங்கு தங்கியுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் ஆவார்கள்.

குறித்த ரிசாட்டுக்கு செல்லக்கூடிய முக்கியமான வழித்தடம் நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளது.

சில நாட்களாக பெய்த மழையும், பனியுமே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து மீட்புபடையினர் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று வரை குறித்த பகுதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers