வளைகுடா நாடுகளின் உதவியுடன் பிரான்சை மாற்றுவோம்: பிரதமர் உறுதி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளின் உதவியுடன் வரி குறைப்புகளை மேற்கொண்டு பிரான்சை தொழில் செய்வதற்கு உகந்த நாடாக்குவோம் என்று பிரான்ஸ் பிரதமர் Edouard Philippe தெரிவித்தார்.

ஞாயிறு அன்று துபாயில் நடைபெற்ற அரசியல் மற்றும் தொழில்துறையின் முக்கியப் புள்ளிகள் பங்குபெறும் Davos of the Middle East என்று அழைக்கப்படும் World Government Summitஇல் உரையாற்றிய பிரான்ஸ் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

1000 வலிமையான பார்வையாளர்கள் பங்குபெற்ற மாநாட்டில் பேசிய அவர், பிரான்சில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.

தொழிலுக்கும் முதலீட்டுக்கும் உகந்த உள்கட்டமைப்பையும் பிரான்சில் கார்ப்பரேட் வரி குறைப்பையும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதிபர் மேக்ரானைப்போல் பிரெக்சிட்டைக் குறித்தோ டிரம்பைக் குறித்தோ அவர் பேசவில்லை.

சனிக்கிழமை UAEஇன் இரண்டு பெரிய முதலீட்டாளர்களையும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் Mohammed bin Zayed Al-Nahyanஐயும் சந்தித்த அவர் பிரான்சில் முதலீடு செய்வது குறித்த அவர்களது தொடர் ஆர்வத்தை உணர முடிந்தது என்றார்.

என்ன ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

UAE செய்யும் 800 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் சுமார் 3 பில்லியன் டொலர்கள் மட்டுமே பிரான்சில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் அதிக முதலீட்டை கவர்வதற்கான நடவடிகைகளில் பாரிஸ் ஈடுபட்டுள்ளது.

UAE பிரான்சிற்கு மூன்று ராணுவத்தளங்களுக்கு இடமளித்துள்ளது மட்டுமின்றி ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளுடன் போரிடும் பிரான்சு ஆதரவு தரும் கூட்டுப்படைகளுக்கு 30 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்