பிரான்சில் சர்ச்சைக்கு ஆளான இஸ்லாமிய பெண் பாடகி: நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடலால் பிரபலமடைந்த பாடகி ஒருவர் சமூக ஊடகங்களில் தெரிவித்த முரண்பாடான கருத்துகளால் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட்டே வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

22 வயதான Mennel Ibtissem என்னும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் பாட்டுப் போட்டி ஒன்றில் பாடிய Leonard Cohenஇன் Hallelujah பாடலால் பிரபலமானார்.

அவர் பாடிய அந்தப்பாடல் Youtubeஇல் வைரலாகி 900000 முறை பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் சமூக ஊடகம் ஒன்றில் அவர் பதிவிட்ட இடுகை ஒன்றில் 2016 Nice lorry attack என்று அழைக்கப்படும் தாக்குதல் உண்மையாகவே தீவிரவாத நோக்கம் கொண்டதா என்று அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

பிரான்சின் Nice என்னும் பகுதியில் Bastille Day அன்று நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டனர்.

அதைக் குறித்து கருத்து தெரிவித்த Mennel Ibtissem, ”இப்படி தாக்குதல்கள் நிகழ்வது வழக்கமாகிவிட்டது, வாரத்திற்கு ஒரு தாக்குதல் நடக்கிறது.

தனது கடமையில் உண்மையாக இருப்பதற்காக தீவிரவாதி தனது அடையாள ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறான், ஒரு தவறான செயலைச் செய்யும்போது எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லக்கூடாது” என்று பதிவிட்டிருந்தார்.

சில வாரங்களுக்குப் பிறகு Saint-Etienne-du-Rouvrayஇல் உள்ள ஆலயம் ஒன்றில் நுழைந்த சில மனிதர்கள் ஒரு வயதான பாதிரியாரைக் கொலை செய்தனர்.

இது குறித்து பதிவிட்டிருந்த Mennel ”நமது அரசாங்கம்தான் உண்மையான தீவிரவாதி” என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின, இது பலியானவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று பலர் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் அவர் ஒரு இஸ்லாமியராக இருப்பதால் நியாயமின்றி தாக்கப்படுவதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் இடுகைகளின் எண்ணிக்கை அதிகமாகவே Mennel Ibtissem தான் தீவிரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்ததாகவே கூறி மன்னிப்பும் கேட்டார்.

என்றாலும் வெள்ளியன்று அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Facebookஇல் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் “ நான் யாரையும் எப்போதும் காயப்படுத்தவேண்டும் என்று விரும்பியதில்லை, வேண்டுமென்றே நான் அவ்வாறு செய்தேன் என்று கருதப்படுவது எனக்கு வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

“எல்லா வெறுப்புக்களுக்கும் அப்பாற்பட்டு அமைதியையும் சகிப்புத்தன்மையையும் பரப்ப பாடுபடுவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது இந்த அறிக்கை 500000 முறை பார்க்கப்பட்ட நிலையில் பலரும் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்