பிரான்சில் வேலை வேண்டுமா? இந்த மொழிகள் அவசியம்

Report Print Athavan in பிரான்ஸ்

பிரான்சில் வேலைதேடுபவர்களில் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு அதிக தேவை இருந்தாலும் ஆங்கிலத்துக்கு இணையாக இன்னும் பிற வெளிநாட்டு மொழிகளும் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

JobLift எனும் தேடல் தளம் வேலைவாய்ப்பு விளம்பரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி பிரான்சில் வேலைதேடுபவர்களுக்கு அதிக பயனுள்ள வெளிநாட்டு மொழி எது எனும் முடிவை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலம் நன்கு தெரிந்த 8,91, 226 விண்ணப்பதாரர்கள் வேலைக்கு வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா பிரான்சில் செய்யும் வர்த்தகத்தின் பங்கு 11.8 % மட்டுமே ஆகும்.

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஜேர்மன் மொழி தெரிந்தவர்களுக்கு 72,560 வேலைவாய்ப்பு இருந்துள்ளது, பிரான்ஸ் உடன் அதிகமாக வர்த்தகம் செய்யும் முதல் நாடக 16.8 % அளவில் ஜேர்மனி உள்ளது.

மூன்றாவது இடத்தில் ஸ்பானிஸ் 56,380 வேலைவாய்ப்புகளோடு உள்ளது, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டுக்கு இடையே உள்ள வர்த்தகம் 6.4 % ஆகும்.

நான்காவது இடத்தில் இத்தாலி மொழி 11,500 எனும் அளவில் உள்ளது, நிதி மற்றும் விற்பனை துறையில் தான் இத்தாலி மொழிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஐந்தாம் இடத்தில் அரபி மொழியும் டச்சு, சீன, போர்ச்சுகிசு, ரஸ்ய மற்றும் ஜப்பான் மொழிகள் அடுத்தடுத்தாக முதல் 10 இடங்களில் உள்ளது.

பிரான்சில் ஆங்கிலம் தெரிந்தது இருப்பது சாதகமான அம்சமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற அளவு வர்த்தக உறவு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளதா எனும் கேள்வி எழுகிறது.

பிரான்சில் உள்ள மூன்றில் ஒருவர் தங்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் வேலைவாய்ப்பு பறிபோவதாக கருதுகின்றனர்.

ABA எனும் ஆங்கிலப் பள்ளி அனைத்து வயதினரிடையே நடத்திய ஆய்வில், மூன்றில் ஒரு பகுதியினர் மொழியியல் தடைகள் காரணமாக வேலை செய்யும் இடங்களில் தங்கள் முன்னேற்றம் தடைபடுவதாக கருதுகின்றனர் என தெரியவந்துள்ளது.

20 முதல் 45 வயதில் உள்ளவர்கள் வேலையில் மொழியியல் காரணமாக தங்கள் முன்னேற்றம் தடைபடுவதாக நினைத்தாலும், 55 சதவிகிதத்தினர் தங்களின் முன்னேறும் வாய்ப்பை முற்றாக இழந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்