பிரான்சில் கடும் பனிப்பொழிவு: கலக்கத்தில் மக்கள்

Report Print Athavan in பிரான்ஸ்

பிரான்சில் கடும் பனிப்பொழிந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இன்று அதிகம் பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் வடக்கு பகுதியின் சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் செவ்வாய் அன்று சுமார் 15cm அளவு பனிப்பொழிவு இருந்தது.

தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மேலும் அதிக பனிப்பொழியும் என்பதால் மக்கள் யாரும் தங்களது கார்களை உபயோகிக்க வேண்டாம் என பிரான்ஸ் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பனியினால் செவ்வாய்கிழமை ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசல் மீண்டும் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லவேண்டாம் என 4வது நாளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் தற்போது நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் Brittany மற்றும் Western France பகுதிக்கு மழையை கொண்டுவரும், மேலும் இது பாரிஸ் நோக்கி நகர்வதால் இந்த கடும் பனிப்பொழிவு நடைபெறுகிறது.

இதன்காரணமாக பிரான்சில் 4cm முதல் 7cm அளவு பனிப்பொழிவும் சில இடங்களில் 10cm பனிப்பொழிவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் பனிப்பொழிவு பிரான்ஸின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பனியால் ஏற்படும் அசாதாரண சூழலை கையாள 27 துறையை சேர்ந்த மீட்புகுழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்