பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பிரான்ஸ் அமைச்சர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தன் மீது இளம்பெண் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

பிரான்சு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் Nicolas Hulot.

இவர் 1990களில் ஒரு இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக வாராந்திரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

Ebdo என்னும் அந்த பத்திரிகை ஒரு பிரபல பிரெஞ்சு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 1997ஆம் ஆண்டு தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிசில் புகார் தெரிவித்திருந்தார் என்று கூறியது.

அந்தப் பெண் 2008ஆம் ஆண்டு பொலிசுக்கு புகார் அளித்த நிலையில், Hulotயை பொலிசார் விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Hulot, தவறான ஆதாரமற்ற வதந்திகள் தன்னை வேதனைப்படுத்துவதாக தெரிவித்தார்.

நானாகவே முன்வந்துதான் பொலிஸ் விசாரணைக்குட்பட்டேன், தொடர்ந்து விசாரிக்க எதுவும் இல்லை என்பதால் பொலிசார் விரைந்து விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்கிறார் அவர்.

இதேபோல் இன்னொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசியதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது, அதையும் Hulotம் சம்பந்தப்பட்டபெண்ணும் மறுத்துள்ளனர்.

மேலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் Hulot தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்