பிரான்ஸை காப்பி அடிக்கும் அமெரிக்கா: அடம்பிடிக்கும் டிரம்ப்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் நடத்தப்பட்ட அணிவகுப்பு போன்று அமெரிக்காவில் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பிரான்சு நாட்டின் Bastille Day நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

இதனைபோன்று அமெரிக்காவிலும் அணி வகுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

பெண்டகன் அதிகாரிகள் அவரது உத்தரவை ஏற்று அணி வகுப்பு ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகிறார்கள்.

அணி வகுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நாள் அதிபருடனோ அரசியலுடனோ தொடர்புடையதாக இருக்கக்கூடாது என அதிகாரிகள் எண்ணுகின்றனர்.

இந்த அணி வகுப்பு வட கொரிய அதிபருக்கு மட்டுமல்லாது அமெரிக்காவின் எதிரி நாடுகள் அனைத்திற்கும் அதன் ராணுவ பலத்தை காட்டுவதாக இருக்க வேண்டும் என்று பெண்டகன் கருதுகிறது.

இதற்கிடையில் டிரம்ப்பின் அணியில் உள்ள அதிகாரி ஒருவர் ராணுவத்தின் டாங்குகள் மற்றும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வாகனங்களையும் அணி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரியதாகவும் ராணுவம் அதை மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்