பிரித்தானியாவில் புதுக்கட்சி: ரகசியத்தை போட்டு உடைத்த பிரான்ஸ் ரேடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியாவில் புதுக்கட்சி ஒன்று உருவாக இருப்பதை அக்கட்சி பரம ரகசியமாக வைத்திருக்க, பிரான்ஸ் ரேடியோ ஒன்று உண்மையைப் போட்டு உடைத்தது.

Renew என்று அழைக்கப்படும் இயக்கம் ஒன்று பிரித்தானியாவில் தனது கட்சியை அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அதன் தற்போதைய பிரதமரான மேக்ரான் எப்படி En Marche movement என்னும் இயக்கத்தைத் தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியைப் பிடித்தாரோ அவரை முன்மாதிரியாகக் கொண்டு, பிரான்சின் ஆலோசனையையும் பெற்று புதிய இயக்கம் ஒன்று பிரித்தானியாவில் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட உள்ளது.

இதை அந்த இயக்கம் ரகசியமாக வைத்திருந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் ரேடியோ ஒன்று Renew இயக்கம் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும், அந்த இயக்கம் ஏற்கனவே தனது சொந்த இணையதளத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ரேடியோவின் கூற்றுப்படி அந்த இணையதளம் www.renewBritain.org ஆகும்.

தனது இணையதளத்தில் Renew தனது மூன்று முக்கிய நோக்கங்களாக பொருளாதாரத்தை புதுப்பித்தல், சமத்துவத்தை அதிகரித்தல் மற்றும் பிரெக்சிட்டை திருப்புதல் ஆகியவற்றை முன்வைக்கிறது.

ஏற்கனவே பிரெக்சிட் குறித்து மாறுபட்ட கருத்துகள் முதியவர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையே நிலவி வரும் நிலையில் இந்த இயக்கம் பிரித்தானிய மக்களிடையே எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்