முதல் முறையாக மக்கள் முன்னர் காட்டப்பட்ட பாரீஸ் தீவிரவாத தாக்குதல்தாரி

Report Print Raju Raju in பிரான்ஸ்

பாரீஸில் 2015-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நகரின் பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதுடன் 400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்து 4 மாதங்கள் கழித்து வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சலாஹ ஆப்டேஸ்லாம் (28) பெல்ஜியமில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இரண்டாண்டுகளில் தற்போது முதல் முறையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சலாஹவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட போது சலாஹவுக்கு தலைமுடி குறைவாக இருந்த நிலையில் தற்போது முடி நீளமாகவும், தாடியும் உள்ளது.

அவர் மீதான குற்றங்களை நீதிபதி கூறிய போது, நீதிமன்றத்தில் நிற்க மறுத்த சலாஹ, எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாது எனவும் கூறினார்.

சலாஹ மீது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு முன்னரே ஐஎஸ் தீவிரவாதிகளை அழைத்து வந்தது, வெடிபொருள் உற்பத்தியில் ஈடுபாட்டுடன் இருந்தது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கில் தொடர்புடைய இன்னொரு தீவிரவாதி சோபைன் அயாரி (24)-யுடன் சலாஹவின் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்