பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு பலத்த எதிர்ப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

Corsicaவுக்கு வருகை தரும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் 25000 பேர் அணிதிரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நிகழ்த்தினர்.

Corsicaவுக்கு இன்னும் அதிக உரிமைகள் தரும்படி பிரான்ஸ் ஜனாதிபதியை வற்புறுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

பிரான்சின் ஒருமைப்பாட்டுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த Corsica மக்களுடன் கரம் கோர்த்துக் கொண்டனர்.

எனவே மேக்ரான், செவ்வாயன்று Corsicaவுக்கு வருகை தர உள்ளதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு ஆயுதம் ஏந்திப் போரிட்ட Corsica நாட்டினர் பின்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அரசியல் அணுகலை மேற்கொண்டனர்.

மாபெரும் பெரும்பான்மையுடன் Corsica சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற அவர்கள் Corsican மொழி பிரெஞ்சு மொழியுடன்கூட இன்னொரு ஆட்சி மொழியாக அறிவித்தல் உட்பட பல சலுகைகளை எதிர்பார்த்திருந்தனர் என்பதை பெருமான்மையோர் அறிவர்.

இப்போது தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து மறுக்கப்படுமானால், மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டியிருக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Corsicaவில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிரதிநிதியான Claude Érignacஇன் 20 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அங்கு செல்லவிருக்கும் மேக்ரான், Corsica நாட்டவர்களுக்கு சலுகைகளை அறிவிக்கும் பட்சத்தில் mainland Franceஇல் உள்ள மக்களின் கோபத்தை அவர் சம்பாதிக்க நேரிடும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்