பிரான்சில் அதிகம் திருடப்பட்ட கார்களின் பட்டியல் வெளியானது

Report Print Athavan in பிரான்ஸ்

பிரான்சில் இருப்பவர்கள் புதிய கார் வாங்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் இந்த 10 வகை கார்களை தவிர்க்கவும்.

ஆட்டோ பிளஸ் எனும் பத்திரிக்கை வருடம் தோறும் பிரான்ஸில் திருடர்கள் அதிகம் திருடிய கார்களின் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான பட்டியலில் வெள்ளிக்கிழமை வெளிவந்த கார் பத்திரிகையான ஆட்டோ பிளஸ் பதிப்பில் பிரான்சில் திருடர்கள் மிகவும் விரும்பும் கார்கள் வகைகளை ஆராய்ந்து வரிசைபடுத்தியுள்ளனர்.

இந்த பத்திரிகை 2017 ஆம் ஆண்டில் பிரான்சில் திருடப்பட்ட முதல் பத்து கார்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இதில் Smart fortwo கார் முதலிடம் பிடித்துள்ளது, இரண்டாவது இடம் Renault Clio-கு சென்றது, இது 2016 ஆம் ஆண்டு பட்டியலில் 6 வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.

Renault Clio வகை கார்கள் எளிய முறையில் திருடி ஸ்டார்ட் செய்ய வசதியாக இருப்பதால் 6-ம் இடத்தில் இருந்து இந்த வருடம் இரண்டாம் இடத்தை பிடித்ததற்கான காரணத்தை இதழ் கூறியுள்ளது.

ஒவ்வொரு நாளும் பிரான்சில் தினமும் 285 கார்கள் திருடப்படுகின்றன, இது 2016 -ம் ஆண்டை காட்டிலும் 5.1 சதவீத அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் பிரான்சில் அதிகமாக திருடப்பட்ட பத்து கார்கள்

  1. Smart Fortwo
  2. Renault Clio
  3. Land Rover Range Rover Evoque
  4. BMW X6
  5. Renault Twingo 1
  6. BMW Série 6
  7. Land Rover Range Rover/Range Rover Sport
  8. Mercedes CLA
  9. BMW X5
  10. DS3/DS3 Cabrio

குறைந்ததாக திருடப்பட்ட கார்கள் என BMW i3 மற்றும் Renault zoe போன்ற மின்சாரத்தில் இயங்கும் கார்களை இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்ஸில் கார் திருடபட்டதாக பதிவான 52 சதவீத வழக்குகளில், தெருவில் நிறுத்தப்பட்ட கார்கள் 31 சதவீதமும், கேரேஜ் அல்லது கார் நிறுத்ததில் இருந்த கார்கள் 12 சதவிகிதமும் திருடப்பட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்