இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 5 பேர் பலி

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Saint-Tropez நகரில் உள்ள Carces ஏரியின் பக்கத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்களும் இராணுவ விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமானதாகும்.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் மூன்று பேரும், இன்னொரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும் இருந்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளார்கள்.

இதில் நால்வரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் மட்டும் இன்னும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்தில் நடந்த இடத்தில் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்