பிரான்சில் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிப்ரவரி மாதத்திலிருந்து பிரான்சு நாட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

பிப்ரவரி மாதம் பிறந்து விட்டது, இந்த மாதம் பிரான்சு மக்கள் பல மாற்றங்களை சந்திக்கவிருக்கிறார்கள்.

காஸ் விலை உயர்வு

காஸ் விலை 1.3 % அதிகரிக்க உள்ளது. Gas Cookersகளை மட்டும் பயன்படுத்துவோருக்கு 0.4 சதவிகிதமும், Gas Cookersகளுடன் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்துவோருக்கு 0.8 சதவிகிதமும், வீட்டை சூடாக்குவதற்காக ஹீட்டர்களைப் பயன்படுத்துவோருக்கு 1.4 சதவிகிதமும் அதிகரிக்க உள்ளது.

காஸ் விலை உயர்கிறது, பெரிய தலைவலி என்று நீங்கள் எண்ணினால், 2015 ஜனவரிக்குப்பின் 11.1 சதவிகிதம் விலை குறைக்கப்பட்டதை மறக்க வேண்டாம்.

Lyonஇல் வீடு வாடகை

மத்திய பிரான்சின் Lyonஇல் வீடு வாடகைக்கு விடுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதாவது நீங்கள் Lyonஇல் வருடத்திற்கு 120 நாட்களுக்குமேல் வீடு வாடகைக்கு விடவேண்டுமென்றால், Town Hallஇல் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும்.

சாலைகளில் சுங்க வரி

சாலைகளில் சுங்க வரி அதிகரிக்கப்பட உள்ளது. சாலைப் பராமரிப்பு வேலைகளுக்கு பணம் தேவைப்படுவதால், சுங்க வரி அதிகரிக்கப்பட உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் 1 முதல் 2 சதவிகிதமும், குறைவான போக்குவரத்து உள்ள சாலைகளில் 4 சதவிகிதம் வரையும் உயர்த்தப்படலாம்.

பைக்குகளுக்கு உதவித்தொகை

மின்சாரத்தில் இயங்கும் பைக்குகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறது.

மின்சாரத்தில் இயங்கும் பைக் ஒன்றை வாங்குவதற்கு, முன்பு பைக்கின் விலையில் 20 சதவிகிதம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுபோல் இனி அது கிடையாது.

ஒரே விதி விலக்கு, வரி விலக்குப் பெற்ற முதியோர்களுக்கு மட்டுமே, அதுவும் அவர்கள் உள்ளூர் Town Hallஇலிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இனி பழைய பத்து பவுண்ட் நோட்கள் கிடையாது

இனி பழைய பத்து பவுண்ட் நோட்டுகள் கிடையாது. பிப்ரவரிக்குமேல் பழைய பத்து பவுண்ட் நோட்டுகளைப் பயன்படுத்த முடியாது. எனவே சேர்த்து வைத்திருக்கும் பழைய நோட்டுக்களையெல்லாம் உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள்!

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்