10 பில்லியன் யூரோ நிதியை ஒதுக்க பிரான்ஸ் முடிவு: எதற்கு தெரியுமா?

Report Print Raju Raju in பிரான்ஸ்

கண்டுப்பிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக 10 பில்லியன் யூரோக்களை பிரான்ஸ் ஒதுக்கும் என அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசும் போதே மேக்ரான் இதை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் தொழிலாளர் விதிகள் நாட்டை இன்னும் போட்டித்திறன் மிக்க வணிகச் சூழலுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உலக வெப்பமயமாதல் நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு பூகோள வெப்பமயமாதல் பற்றி பேச யாரையும் சந்தேகத்திற்கு இடமின்றி அழைக்கவில்லை எனவும் மேக்ரான் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை குறிப்பிட்டே மேக்ரான் இப்படி மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்