கஞ்சா புகைத்தால் தண்டனை குறைவு: பிரான்ஸ் அரசு முடிவு !

Report Print Athavan in பிரான்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் வியாழன் அன்று பொதுமக்கள் கஞ்சா அடித்து மாட்டிகொண்டால் விதிக்கப்படும் அபராத தொகையை குறைத்து அறிவித்துள்ளது.

பெருகிவரும் கஞ்சா புகைக்கும் பயன்பாட்டாளர்களால் பதியப்படும் வழக்கினால் பொலிஸ் மற்றும் நீதிதுறையில் ஏற்படும் அதிக பணிச்சுமை மற்றும் காலவிரயத்தை குறைக்கவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் பிரான்ஸில் கஞ்சா புகைப்போரின் எண்ணிக்கை பெருகிகொண்டே செல்கிறது, பிரான்ஸ் முழுவதும் தற்போது கஞ்சா போதை உபயோகிப்போர் சுமார் 700,000 பேர் உள்ளனர் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை மந்திரி ஜெரார்ட் காலகம்ப் கூறும் போது. "கஞ்சா புகைக்கும் குற்றத்திற்காக எளிமையான அபராதங்களை நாங்கள் அறிமுகப்படுத்தப் போகிறோம்," என்றார். இதன் மூலம் போதை பயன்பாட்டல் குற்றம்சாட்டபடுவோர் மீது வழக்கு பதிவு கிடையாது.

புதிய அபராதங்களாக 150 முதல் 200 யூரோக்கள் ($ 180 முதல் $ 250) விதிகபடும் என தகவல்கள் தெரிவிகின்றன.

பிரான்சின் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு எதிரான தற்போதைய சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட கடுமையான சட்டங்கள் ஆகும். கஞ்சா பயன்படுத்தினால் 3,750 யூரோக்கள் அபராதமும் மற்றும் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படுகின்றன.

ஆனால் இதை தற்போதைய பிரான்ஸ் அரசு எளிமைபடுத்தியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டில், வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக இதுவரை 140,000 பேரை பிரான்ஸ் பொலிஸ் கைது செய்துள்ளது, இருப்பினும் 3,098 பேர் மட்டுமே சிறை தண்டனை பெற்றனர்.

கடந்த காலத்தில், பொலிசார் மற்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டபட்டவர்களுக்கு விசாரனை மற்றும் முறையான எச்சரிக்கைகள் செய்வதிலேயே நிறைய நேரத்தை செலவிட்டு வந்தனர். அது இனிமேலும் தொடரும், எனவே இந்த அபாராத குறைப்பு பயனுள்ளதாக இருக்காது" என்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி ருகி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கஞ்சா மற்றும் மற்றும் பிற போதை மருந்துகள் மீதான தீர்ப்புகள் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே இருந்துள்ள நிலையில், அபராத குறைப்பு அதிருப்தியாளர்களுக்கு மேலும் சூடான விவாத தலைப்பாக கிடைத்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்