பிரான்ஸ் மக்களுக்கு அபாய எச்சரிக்கை

Report Print Harishan in பிரான்ஸ்
610Shares

பிரான்ஸில் பெய்து வரும் பலத்த மழையால் அரசு சார்பாக மக்களுக்கு ’ரெட் அலெர்ட்’ அபாய எச்சரிக்கை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகள் நிரம்பி வழிந்து வருவதால் கறைபுரண்டு நகரத்திற்குள் வெள்ளம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கையில், நார்மேண்டி மற்றும் பாரிஸ் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாட்டின் இரண்டாம் முக்கிய அபாய எச்சரிக்கையான ‘ஆரஞ்சு அலெர்ட்’ வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு பிரான்ஸ் மாகாணங்களான டொப்ஸ் மற்றும் ஜூரா பகுதி மக்களுக்கு நாட்டின் அதிகபட்ச அபாய எச்சரிக்கையான ’ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து இரண்டொரு நாட்களுக்கு வீடுகளில் இருப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டாயம் வெளியில் பயணம் செய்ய நேரிடும் மக்கள், நிரம்பி இருக்கும் ஆறுகளை ஒட்டிய சாலைகளை தவிர்த்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மாற்றுப் பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்