சிறைக் கைதிகளால் கொடூர தாக்குதல்: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காவலர்கள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
136Shares

பிரான்சில் சிறைக் கைதிகளால் காவலர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து தேசம் முழுவதும் உள்ள சிறைக் காவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு, சிறைக்குள் போதிய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி சிறை துறையினர் மேற்கொண்டுவரும் போராட்டம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் சிறைக் கைதிகளால் காவலர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இன்று நாடு முழுவதும் உள்ள சிறைக் காவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சிறைத்துறை ஸ்தம்பித்துள்ளது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்,

சிறைத்துறை உரிய முறையில் செயல்பட அனைவரது ஒத்துழைப்பும் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் முக்கிய சிறைகளில் கைதிகளால் காவலர்கள் தக்கப்பட்டதை அடுத்தே இந்த வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு விடுத்த கோரிக்கையை தொழிற்சங்கங்கள் நிராகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்