பிரான்ஸில் கொண்டாடப்பட்ட சீனாவின் திருவிழா

Report Print Kabilan in பிரான்ஸ்
138Shares

சீன நாட்டின் கலாச்சார விழாவான விளக்கு திருவிழா, பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் காயலாகி நகரில், சீனாவின் கலாச்சார விழாவான விளக்கு திருவிழா, ஏராளமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

இந்த விளக்குகள் 15 மீட்டர் வரை உயரம் கொண்டவையாகும். சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் கடைசி நாளில், இந்த திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக நடந்த இந்த கொண்டாட்டத்தில், சீன மக்களுடன் பிரான்ஸ் நாட்டு மக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்