உலகிலேயே இரண்டாவது முறை முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் மனிதர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஏழு ஆண்டுகளுக்கு முன் முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவரின் உடல் அந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்ளாததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரண்டு மாதங்கள் அவர் முகமின்றி கோமா நிலையில் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார்.

பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் கடந்த திங்களன்று அவருக்கு மீண்டும் ஒரு முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை முடிய கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முக மாற்று சிகிச்சை தோல்வியடைந்த ஒருவருக்கு மீண்டும் அதை மேற்கொள்ள முடியும் என்பதை இந்த சிகிச்சை காட்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்