பிரான்ஸில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு

Report Print Harishan in பிரான்ஸ்

பிரான்ஸில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில் தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம்.

இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளை விட 17,000 ஆயிரம் குழந்தைகள் குறைவாக 767,000 குழந்தைகள் மட்டுமே 2017-ஆம் ஆண்டில் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக திருமணமாகும் பெண்கள் குழந்தை பெறுவதை சில ஆண்டுகள் தள்ளி வைப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சராசரியாக பிரான்ஸ் பெண்கள் 30.6 வயதில் குழந்தைகள் பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 15.5 ஆக இருந்த 65-வயதுக்கும் அதிகமானோர் சதவிகிதம் கடந்தாண்டு 19.6 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

67.2 மில்லியன் மக்கள் தொகையுடைய பிரான்ஸ், ஜேர்மனிக்கு அடுத்த இடத்தில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடு என்னும் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்