குடியேறிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கோரிக்கை

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பிரான்சின் காலேஸ் பகுதியில் மற்றொரு அகதி முகாம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய குடியேற்ற நெருக்கடி காலத்தில் கிட்டத்தட்ட 7,000 மக்கள் - மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து காலேஸ் முகாமில் வசித்து வந்தனர்.

இங்கிருந்து பிரித்தானியாவுக்கு செல்வது மிகவும் சுலபம், Jungle Camp என்றழைக்கப்படும் இந்த முகாம் கடந்த 2016ம் ஆண்டு கலைக்கப்பட்டது.

எனினும் தற்போது 700-க்கும் அதிகமான குடியேறியவர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன், அங்கு குடியேறியவர்களுடனும், பணிபுரியும் குழுக்களுடனும், உள்ளூர் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.

குடியேறுபவர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கபடுவார்கள் என்று உறுதியளித்த ஜனாதிபதி மேக்ரான், பாதுகாப்புப் படையினர் மீதான கடுமையான குற்றச்சாட்டை தவிர்க்கும் விதமாக பேசியுள்ளார்.

"எந்த ஒரு சூழ்நிலையிலும் இங்கே மற்றொரு முகாம் உருவாக பிரான்ஸ் அனுமதிக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் பிரான்சில் 100,000 குடியேற்ற கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இது ஐரோப்பாவிலேயே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கிடையே அடுத்த மாதம் குடியேற்ற கொள்கையில் ஜனாதிபதி மாற்றம் கொண்டுவரவுள்ளார், இதன்மூலம் குடியேறிகளை விரைவில் ஏற்றுக்கொள்வது மற்றும் திருப்பி அனுப்புவது உட்பட முக்கிய மாற்றங்கள் நிகழலாம்.

இந்நிலையில் பிரித்தானியாவுக்கான விஜயத்தின் போது, குடியேறிகளை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானியா முன்வரவேண்டும் என பிரதமர் தெரேசா மேவுக்கு கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஆதரவற்ற குழந்தைகள், இளைஞர்கள், குடும்பங்களை பிரித்தானியா அனும்திக்க வேண்டும் என்றும், எல்லை பாதுகாப்பில் அதிக அக்கறையுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரசா மேவிடம் வலியுறுத்தலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்