இதயத்தைக் கவர குதிரையை பரிசளித்த பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பெண்ணின் இதயத்தைக் கவர பூவைக் கொடுப்பார்கள், குதிரையைக் கொடுத்துள்ளார் பிரான்சு ஜனாதிபதி Emmanuel Macron, சீன அதிபர் Xi Jinpingதான் பரிசுபெற்ற அந்த அதிர்ஷ்டசாலி.

சக நாட்டுத் தலைவர்களுக்கு ஆச்சரியங்களை அளிப்பதில் பிரான்சு ஜனாதிபதி Emmanuel Macron பேர் போனவர்.

இதற்கு முன் ரஷ்ய அதிபர் Vladimir Putinஐ "Sun King என்று அழைக்கப்படும் Louis XIV ஆல் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகையில் சந்தித்து ஆச்சரியப்படுத்தினார்.

முதலாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைந்ததின் 100ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக பாரீஸில் நடத்தப்படும் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க அதிபர் Donald Trumpக்கு அழைப்பு விடுத்தார்.

அதேபோல் இம்முறை சீன அதிபரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பாரீஸிற்கு சீன அதிபர் வருகை புரிந்தபோது தனக்கு காவலாக வந்த 104 குதிரை வீரர்களைக் கண்டு வியந்தார். இதை நினைவில் வைத்துக்கொண்ட பிரான்சு ஜனாதிபதி தனது குதிரைப்படையிலுள்ள 8 வயதான Vesuvius என்னும் குதிரையைப் பரிசளித்துள்ளார்.

சீன - பிரெஞ்சு உறவுகள் மேம்படுவதற்காக மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரான்சு அதிபர் தன்னுடன் இந்தக் குதிரையைக் கொண்டு சென்றுள்ளார்.

ஏற்கனவே சீனா ஒரு பாண்டா கரடியை பாரீஸிற்கு அருகிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எளிதில் புக முடியாத சீனச் சந்தையில் பிரெஞ்சுக் கம்பெனிகளைப் புகுத்துவதிலும் ஆர்வம் கொண்டுள்ள பிரான்சு அதிபர் தன்னுடன் 50 தொழில் வல்லுனர்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்