பிரபல பாடகி பிரான்ஸில் மரணம்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸின் பிரபல பாப் பாடகி பிரான்ஸ் கால் (70) புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்த தகவலை காலின் இணையதள பக்கத்தில் அவர் பிரதிநிதி வெளியிட்டுள்ளார்.

கால் கடந்த 1947-ல் பாரீஸில் பிறந்தார். அவரின் தந்தை ராபர்ட் பிரபல பாடலாசிரியராகவும், தாய் சிச்சில் பெர்த்தியா பிரபல பாடகியாகவும் திகழ்ந்தார்கள்.

தனது 16 வயதில் பாப் உலகில் நுழைந்த பிரான்ஸ் கால் பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

பல்வேறு திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியுள்ள காலுக்கு கடந்த 1976-ல் மைக்கேல் பெர்கர் என்ற பாடகருடன் திருமணம் நடந்தது.

பெர்கர் கடந்த 1992-ல் உயிரிழந்தவுடன் தனது மகளுடன் கால் வாழ்ந்து வந்தார்.

தொடர்ந்து இசை உலகில் கொடிக்கட்டி பறந்த கால் தனது மகள் 1997-ல் இறந்தவுடன் இனி பாடுவதில்லை என முடிவெடுத்து இசை உலகிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்