பிரான்ஸில் கடும் பனிச்சரிவு: வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸின் பல இடங்களில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் நான்கு தென் மேற்கு பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Meteo பிரான்ஸ் வானிலை மையம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி Ariege, Haute - Garonne, Pyrenees - Atlantiques, Hautes - Pyrenees ஆகிய பகுதிகளுக்கு வியாழன் மாலையிலிருந்து வெள்ளி மாலை 4 மணி வரை கடும் பனிப்புயலுடன் கூடிய பனிச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதோடு சறுக்கு விளையாட்டுகள், மலையேறுதல் போன்ற விடயங்களுக்கு கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பனிப்பொழிவின் வேகம் அதிகளவில் இருக்கும் எனவும் நேற்றைய நாளில் 60-லிருந்து 80 செண்டி மீட்டர் வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்