பிரான்ஸில் நிலவி வரும் கடும் குளிரை தாங்க முடியாமல் சிறுவர்கள் சிலர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரான்ஸில் கடந்த சில தினங்களாக தட்பவெப்பநிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது.
வீடுகளில் வசிக்கும் மக்களே இதனால் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலையில், அகதிகளுக்கு சரியான உறைவிடம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பெண் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில், மொரோக்கோ நாட்டின் அகதிகளான மூன்று சிறுவர்கள், குளிரை தாங்கிக்கொள்ள முடியாமல் பாரிஸில் உள்ள துணிகளை உலர்த்தும் இயந்திரத்திற்குள் சுருண்டு இருப்பது போல் உள்ளது.
இந்த புகைப்படத்தை எடுத்த கிறிஸ்டின் என்னும் பெண், டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் சர்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அகதிகளுக்கான தகுந்த உறைவிடம் வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் பல முயற்சிகள் எடுத்தும் அதனை அவர்கள் ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தலைநகரில் எடுக்கப்பட்டுள்ள குறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.