அக்காவை குத்திக் கொன்ற தம்பி: காரணம் என்ன?

Report Print Harishan in பிரான்ஸ்

பிரான்ஸில் கணனிக்காக சண்டை போட்ட அக்காவை கத்தியால் குத்தி தம்பி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் Sartrouville பகுதியில் நேற்று(27/12/2017) 19-வயது அக்காவும், 15-வயது தம்பியும் தந்தை வெளியே சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது கணனியை யார் பயன்படுத்துவது என அக்காவிற்கும் தம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் கோபத்துடன் கத்தியை எடுத்த தம்பி, அக்காவின் நெஞ்சில் குத்தியுள்ளார், இதனால் சம்பவ இடத்திலேய பலியானார்.

நண்பகல் 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய அவர்களின் தந்தை இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அந்த சிறுவனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்