ரயில் மீது பேருந்து மோதி 6 குழந்தைகள் பலியான வழக்கு: ஓட்டுநர் மீது நடவடிக்கை

Report Print Harishan in பிரான்ஸ்

பிரான்சில் ரயில் மீது பள்ளிப்பேருந்து மோதி 6 குழந்தைகள் பலியான வழக்கில் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கிழக்கு Pyrenees மாகாணாத்தில் உள்ள Millas கிராமத்தில் பிராந்திய ரயில் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் 6 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

விபத்தில் பலியான அந்த சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிராந்தியத்தின் அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்த கோர விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 46 வயதான பெண் ஓட்டுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் கடக்கும் தடைகள் இயங்கவில்லையா அல்லது பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டுநரின் வன்மத்தினால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறினார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது பொலிசார் எழுப்பிய கேள்விகளால், அந்த பெண் ஓட்டுநர் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானதாக அவரது வழக்கறிஞர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்