பிரான்ஸ் நாட்டில் மணப்பெண் ஒருவருக்காக தயாரிக்கப்பட்ட திருமண ஆடை கின்னஸில் இடம்பிடித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மணமகள் ஒருவர், 8,095 மீட்டர் நீளம் கொண்ட திருமண உடையை அணிந்திருந்தார். அந்த திருமண ஆடை தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
15 தன்னார்வ நிறுவனத்தினர் இணைந்து 2 மாதங்களில் இந்த உடையை வடிவமைத்துள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, 1203.9 மீட்டர் நீளம் கொண்ட திருமண உடையே கின்னஸ் சாதனையாக இருந்தது. அதனை 8,095 மீட்டர் நீளம் கொண்ட இந்த உடை தகர்த்துள்ளது.
மேலும், மிக நீளமாக இருக்கும் இந்த உடை, பல துண்டுகளாக வெட்டி எடுத்து ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் பணம் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.