24 ஆண்டுகள் ஒரே அறையில் அடைக்கப்பட்ட பெண்ணின் பரிதாப நிலை

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
1439Shares
1439Shares
ibctamil.com

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பெற்றோர் கொலை செய்வது, உயிரோடு வைத்து சித்ரவதை செய்வது என்பது தற்போதைய காலகட்டங்களில் நடந்து வருவது அல்லது மாறாக 19 ஆம் நூற்றாண்டிலேயே வன்மையாக இருந்துள்ளது.

பிரான்சின் பாரிஸை சேர்ந்த Blanche Monnier தனது காதலில் உறுதியாக இருந்ததால் இவரது பெற்றோர் இவரை 24 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைத்தனர்.

வழக்கறிஞர் ஒருவரை Blanche காதலித்து வந்துள்ளார், இந்த விவகாரம் இவரது பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து காதலனை மறந்துவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், தனது காதலில் Blanche பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் அவரை ஒரு அறையில் வைத்து அடைத்துள்ளனர். சூரிய வெளிச்சம் கூட படாமல் அந்த அறையிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

இவருக்கு, தாய் Madame Monnier மற்றும் அவரது சகோதரன் ஆகிய இருவரும் அவ்வப்போது உணவுகளை வழங்கியுள்ளனர்.

தன்னை வெளியில் விடுமாறு பலமுறை Blanche கெஞ்சியும் தாய் செவிசாய்க்கவில்லை, சுமார் 24 ஆண்டுகள், 49 வயது வரை வீட்டிற்குள் முடங்கி கிடந்துள்ளார்.

ஒருமுறை இவர் வீட்டுக்குள் போட்ட சத்தம் அருகில் வசிப்பவர்களுக்கு கேட்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர், Blanche வீட்டுக்கு வந்த பொலிசார் வீட்டினை சோதனையிட்டு அவரை மீட்டு பாரிஸில் உள்ள Hôtel-Dieu மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், 1901 ஆம் ஆண்டு Blanche- யின் தாய்க்கு 15 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

24 ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்த Blanche மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார், 12 ஆண்டுகள் மனநல மருத்துவமனையில் இருந்த அவர் அங்கேயே இறந்துபோனார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்