பிரான்சில் உணவை வீணாக்கினால் கடும் நடவடிக்கை: வெளியானது புது உத்தரவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

உணவு வீணாவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரான்சில் பெருவணிக அங்காடிகளில் விற்பனையாகாத உணவுகளை குப்பையில் வீச தடை விதித்துள்ளனர்.

பெருவணிக அங்காடிகள் போன்று உணவகங்களிலும் மீதமாகும் உணவுகளை வாடிக்கையாளர்களே எடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் மொத்த உணவு உற்பத்தியில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் அளவுக்கு உணவு வீணாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது இப்படி இருக்க, சர்வதேச அளவில் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் இது 815 மில்லியன் மக்கள் என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி உலக அளவில் தினசரி 10-ல் ஒருவர் பட்டினியுடன் தூங்கச் செல்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் உணவை வீணாக்குவதை தடுக்கும் பொருட்டு பிரான்ஸ் உலகின் முதல் நாடாக சட்டத்திருத்தம் ஒன்றை இயற்றியுள்ளது.

இதனால் நாட்டின் மொத்த உணவு உற்பத்தியில் 1.8 சதவிகித உணவு மட்டுமே தற்போது வீணாவதாக கூறப்படுகிறது. இந்த அளவை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சரிபாதியாக குறைக்கவும் பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக பிரான்சில் உள்ள பெருவணிக அங்காடிகளில் இருந்து விற்பனையாகாத உணவுகளை வீணாக்குவதை தடை செய்துள்ளனர்.

மட்டுமின்றி உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது உணவின் மீதத்தை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்