பிரான்ஸின் மிகவும் குளிரான இடம் இதுதான்: ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸில் உள்ள மிக குளிரான Mouthe கிராமத்தில் வெறும் 1000-க்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகிறார்கள்.

நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜூரா மலையின் மீது தான் இக்கிராமம் அமைந்துள்ளது.

பிரான்ஸில் பல இடங்களில் குளிர் இருந்தாலும், இங்கு தான் அதிகளவிலான பனிப்பொழிவு பெய்து மிகவும் குளிராக காட்சியளிக்கிறது.

கடந்த 1985-ல் Mouthe கிராமத்தில் -41.2சி என்ற மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இந்தளவு குளிரான வெப்பநிலை பிரான்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவாகவில்லை. இவ்வளவு குளிர் காரணமாக இந்த பகுதியானது லிட்டில் சைபீரியா என்று அழைக்கப்படுகிறது.

Mouthe கிராமத்தில் உள்ள ஏரிகள் கூட பனிக்கட்டிகளாக உறைந்துவிடுவதால் இங்கு வாழும் மக்கள் பனி சறுக்குகளில் ஈடுபடுவதை காண முடியும்.

ஆனால் இவ்வளவு குளிரை இங்கு வாழும் மக்கள் யாரும் வெறுப்பதில்லை என்பது தான் ஆச்சரியம்.

கனடாவில் இது போல இருக்கும் கிராமங்களை இங்கு வாழும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.

ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிருந்து சுற்றுலா வரும் மக்களை கிராமமானது மிகவும் ஈர்த்துள்ளது.

கிராமத்தின் மேயர் டேனியல் பெர்ரின் கூறுகையில், இங்கு சுற்றுலா வரும் மக்களை கிராம மக்கள் அன்போடு வரவேற்பார்கள்.

930 மீட்டர் உயரமுள்ள மலையில் Mouthe அமைந்துள்ளதும், கிராமத்தை சுற்றி இரண்டு மலைகள் இருப்பதும் அதிகளவிலான குளிருக்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

கடந்த 1983 யூலையில் இதுவரையில்லாத 35.7சி என்ற சூடான வெப்பமும் இந்த கிராமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் எல்லை இங்கிருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் தான், இதோடு காட்டு எருமை, கலைமான் போன்ற விலங்குகளும் இங்கு உள்ளன.

இங்கு வாழ்பவர்கள் மரம் வெட்டி பிழைக்கிறார்கள், ஆனாலும் சுற்றுலா மூலம் தான் இங்கு அதிக வருமானம் வருகிறது.

Mouthe-ல் வசிக்கும் மேரி கோல்சர் கூறுகையில், இங்கு சுற்றுலா வர விரும்புகிறவர்கள் குளிரையும், பனியையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அதாவது, குளிர்கால ஆடைகள், சரியான காலணிகள், தொப்பி, கையுறைகள், துண்டு போன்ற பொருட்களை அவசியம் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்