இராஜினாமாவை திரும்ப பெற்றார் லெபனான் பிரதமர் ஹரிரி: மீண்டும் பிரான்ஸ் பயணம்!

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

லெபனான் நாட்டின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த சாத் ஹரிரி, அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் திடீரென தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தார் அந்நாட்டின் பிரதமர் சாத் ஹரிரி.

மத்திய கிழக்கு நாடான லெபனானை கைப்பற்ற ஈரான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக கூறி திடீரென இந்த இராஜினாமா அறிவிப்பை அவர் வெளியிட்டதும் நாடு முழுவதும் அசாதரணமான சூழல் நிலவியது.

இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரசின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த ஹரிரிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும் அழைப்பு விடுத்திருந்தார்.

லெபனானின் இந்த அரசியல் சூழலை பயன்படுத்தி பிரான்ஸ் ஆதாயம் தேட முயற்சிப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்ததால், ஹரிரிக்கு அரசியல் அடைக்களம் தரவில்லை, அவரை மரியாதை நிமித்தமாகவே அழைத்ததாக பிரான்ஸ் அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று பிரான்ஸிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த ஹரிரி தாய்நாட்டிற்கு திரும்பிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 5-ஆம் திகதியான நேற்று தனது இராஜினாமாவை திரும்பப்பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த ஹரிரி, மீண்டும் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு செல்லவுள்ளார்.

பிரதமர் பதவி விலகல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை நீக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக லெபனான் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லெபனான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இ.நா பதுகாப்பு கவுன்சிலின் நிரந்திர உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஐந்து நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் இத்தாலி, ஜெர்மன், இஜிப்ட் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் அந்நீய முதலீட்டாளர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers