அமெரிக்காவின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு பிரான்ஸ் அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. இருப்பினும் அது ஆக்கிரமிப்பு நகரமாகவே கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதாவது, அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும், பிரான்சை பொருத்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உள்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...