வயதான ஏழை கார்பெண்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
515Shares
515Shares
ibctamil.com

வயதான முதியவர் தனது ஆசைப்படி இலவசமாக பிரான்ஸின் பாரீஸ் நகரில் உள்ள முக்கிய இடங்களை சுற்றி பார்த்துள்ளார்.

சிங்கப்பூரை சேர்ந்தவர் சும் கின் நர் (78). கார்பெண்டராக பணியாற்றிய இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போது சும்முக்கு 61 வயதாகியிருந்த நிலையில் அந்த வயதில் கடினமான கார்பெண்டிங் வேலையை செய்ய முடியாது என அவர் வேலை பார்த்த நிறுவனங்கள் வேலையை விட்டு நிறுத்தியது.

இதையடுத்து நிரந்தர வருமானம் சும்முக்கு நின்று போன நிலையில் மாதம் $500 உதவி தொகை கிடைக்க அதை வைத்து வாழ்க்கையை கடத்தி வந்தார்.

திருமணமாகாத சும் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கார்பெண்டராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து மூங்கில் குச்சிகளாலேயே அழகான வீடுகள், நினைவுசின்னங்களை சும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்ய தொடங்கினார்.

அந்த வகையில் மூங்கில் குச்சுகள் கொண்டே உலக புகழ்பெற்ற பாரீஸில் அமைந்துள்ள நினைவுச்சின்னமான ஈபிள் டவரை சும் மிக நேர்த்தியாக வடிமைத்தார்.

அதை செய்யும் போது ஈபிள் டவரை நேரில் பார்க்க அவருக்கு ஆசை ஏற்பட்டள்ளது.

இந்நிலையில் பிரபல தனியார் ஓன்லைன் பத்திரிக்கையான The Straits Times சும்மிடம் பேட்டி எடுத்த நிலையில் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து The Straits Times பத்திரிக்கை வாசகர் ஒருவர் தனது சொந்த செலவில் சும்மை பாரீசுக்கு ஐந்து நாள் சுற்றுலா பயணமாக அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு ஈபிள் டவர் மட்டுமின்றி, லவுரி அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை சும் மகிழ்ச்சியாக சுற்றி பார்த்துள்ளார்.

என் வாழ்க்கையில் நான் பாரீசுக்கு போவேன் என நினைத்து கூட பார்த்ததில்லை, இது நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது என சும் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்