HIV சோதனை செய்து கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
225Shares
225Shares
ibctamil.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் எய்ட்ஸ் நோய்க்கான HIV பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

பிரான்சின் Saint-Denis -ல் உள்ள மருத்துவமனைக்கு சென்ற மேக்ரோன், ரத்த பரிசோதனை செய்து கொண்டார்.

அவர் கூறுகையில், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் பிரான்ஸ் சிறந்து விளங்கவில்லை.

அனைவரும் எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், உங்களை பாதுகாத்து கொள்ள இதுவே சிறந்த வழி.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் 36.7 மில்லியன் மனிதர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிரான்சில் மட்டும் 150,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்