பிரான்ஸ் மக்களிடையே பரவிய அமெரிக்காவின் வணிக கலாசாரம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸில் ’நன்றி கூறும் நாள்’ எனும் அமெரிக்காவில் பின்பற்றப்பட்டு வரும் வர்த்தக கலாசாரம் விமரிசையாக நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில், நவம்பர் 24 ஆம் திகதி 'நன்றி கூறும் நாள்’ கொண்டாடப்படும். இந்நாளில், கணினி முதல் கார் வரை அனைத்து பொருட்களும் மிகவும் சொற்ப விலைக்கு விற்கப்படும்.

எனவே, அன்றைய நாளில் மக்கள் வெள்ளம் போல கடைகளில் சூழ்ந்து, விடியவிடிய பொருட்களை வாங்கி குவிப்பார்கள்.

இந்த கலாசாரத்தினை கனடா உட்பட பல நாடுகள் கடைபிடித்து வரும் நிலையில், பிரான்சும் தற்போது, இந்த கலாசாரத்தை அதிகமாக பின்பற்றி வருகிறது.

அதன்படி, இந்த வார இறுதியில் பிரான்ஸ் கடைக்காரர்கள், 845 மில்லியன் யூரோக்களை ஒன்லைனிலும், 4.5 பில்லியன் யூரோக்களை கடைகளிலும் முதலீடு செய்ய உள்ளனர்.

இதற்கு காரணம், அமெரிக்காவின் வணிக கடைகளில் அதிரடி சலுகைகளை அறிவிக்கும் ’நன்றி கூறும் வெள்ளி’ கலாசாரம் தான். ஆனால், பிரான்ஸில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘கருப்பு வெள்ளி’ எனும் கலாச்சாரம் துவங்கியது.

ஆனால், பிரெஞ்சு நுகர்வோர் வழக்கமாக விற்பனையாகும் காலமாக ஜனவரி மற்றும் கோடைகாலங்களைக் கருதியதால், நவம்பரில் வரும் ‘கருப்பு வெள்ளி’ எனும் சலுகை வணிக முறையில் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

எனவே, பொதுமக்களுக்கு இந்த முறையை விளக்கும் வகையில் பல நாளிதழ்கள், நவம்பர் மாதங்களில் ‘கருப்பு தினம்’ குறித்த கட்டுரைகளை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு வந்தன.

எனினும், ’கருப்பு வெள்ளி’ என்பது ஆங்கிலத்தில் இருந்ததால் பிரெஞ்சு மக்களுக்கு மொழி தடையாக இருந்ததாக கடந்த ஆண்டுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், தற்போது Darty அல்லது FNAC போன்ற பெரிய அளவிலான சில்லரை வணிக நிறுவனங்கள், வலைதளத்தில் ‘கருப்பு வெள்ளி’ பற்றி வெளியிட்டதால், அது பிரான்சில் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

இதன் மூலமாக, கடந்த ஆண்டு ‘கருப்பு வெள்ளி’க்கான மக்களின் ஆதரவு 21 சதவீதத்திலிருந்து, இந்த ஆண்டு 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிரடிட் கார்டு மூலமாக ஒவ்வொரு நபரும் சராசரியாக 187 யூரோக்களை செலவு செய்ய தயாராக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரபல ஒன்லைன் வணிக நிறுவனமான அமேசானின் இயக்குனர் Frederic Duval கூறுகையில்,

நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 20,000 வணிக பொருட்களை சலுகை விலையில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் விளம்பரப்படுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்