பிரான்ஸின் பாரிசிற்கு அதிகளவில் வருகை தரும் சுற்றுலா பயணிகள்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு இந்த ஆண்டின் கோடை காலத்தில் மட்டும் எதிர்பாராத அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

INSEE நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பாரீஸ் மற்றும் இல்-டி-பிரான்ஸ் மாகணத்திற்கு மட்டுமே, கடந்த கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது, கடந்த ஆண்டு இல்-டி-பிரான்ஸுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 12.7 வீதமும், பாரீஸுக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையை விட 6.1 வீதமும் அதிகம் ஆகும்.

இதன் மூலமாக, சுற்றுலாத் தலங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தங்குமிட விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை அதிகளவில் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளன.

மேலும், இந்த ஆண்டு இல்-டி-பிரான்ஸ் மாகாணத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்