பிரான்ஸ் நாட்டுக்கு மனைவியுடன் பயணித்த லெபனான் முன்னாள் பிரதமர்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
124Shares
124Shares
ibctamil.com

லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமர் சாத் ஹரிரி அவரது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளதாக ’பியுச்சர்’ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான் நாட்டின் பிரதமராக இருந்த சாத் ஹரிரி சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த 4ம் திகதி பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்புகள் லெபனான் நாட்டில் ஸ்திரமற்ற சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இவரது ராஜினாமா கடிதத்தை லெபனான் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சவுதி அரேபியா பின்புலமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பொய் என டுவிட் செய்திருந்தார் சாத் ஹரிரி.

இதற்கிடையே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஹரிரிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பினை ஏற்று தனது தனி விமானத்தில் மனைவியுடன் பிரான்ஸ் அருகில் உள்ள லே போர்கேட் பகுதிக்கு ஹரிரி சென்றுள்ளதாக பியூச்சர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு ஒருசில நாட்கள் தங்கியிருக்கும் ஹரிரி பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்து பேசலாம் என தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்