பிரான்ஸில் இருக்கும் அகதிகளுக்கு சிக்கலான நிலை: காரணம் இதுதான்

Report Print Raju Raju in பிரான்ஸ்

குளிர்காலம் நெருங்குவதால் பாரீஸில் தங்க இடமில்லாமல் சாலையில் வசிக்கும் அகதிகளுக்கு சிக்கலான நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இருப்பிடம் இல்லாமல் சாலையில் தங்குகிறார்கள் என மருத்துவ மனிதாபிமான அமைப்பான Medecins du Monde தெரிவித்துள்ளது.

நகரின் Porte de la Chapelle பகுதியில் இருந்த பல அகதிகள் முகாம்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூடப்பட்டது.

முகாம்களில் 2700-க்கும் அதிகமான அகதிகள் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

தங்க இடமில்லாததால் பல அகதிகள் சாலையிலே தங்கி வருகிறார்கள், குளிர் மற்றும் மழை காலம் வருவதால் இது அகதிகளை நிச்சயம் பாதிக்கும்.

இதுகுறித்து சூடனிலிருந்து பாரீஸுக்கு அடைக்கலம் தேடி வந்திக்கும் இப்ராஹிம் என்பவர் கூறுகையில், எங்களுக்கு மழையும், காவல்துறையும் தான் பிரச்சனையாக உள்ளது.

சாலையில் இருக்கும் போது மழை வந்தால் பாலத்துக்கு அடியில் செல்கிறோம், அங்கு வரும் பொலிசார் இங்கு இருக்கக்கூடாது என துரத்தி விடுகிறார்கள்.

வேறு எங்கு தான் நாங்கள் செல்வது என கேட்டால், எங்களுக்கு தெரியாது என சொல்வதாக கூறியுள்ளார்.

நிரந்தர புகலிடம் கிடைத்தால் மட்டுமே இதிலிருந்து தீர்வு கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனிடையில், உடனடியாக அகதிகள் தங்குவதற்கு முகாம்கள் மற்றும் வரவேற்பு மையங்கள் அதிகளவில் திறக்கப்பட வேண்டும் என Medecins அமைப்பின் தலைவர் பிரான்கோஸ் சிவிக்னன் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...