தமிழகத்தில் பிரான்ஸ் பெண்மணி நடத்தி வந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் பிரான்ஸ் நாட்டு பெண் நடத்தி வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் உள்ள வீடுகளின் மொட்டைமாடியில் குடிசையால் வடிவமைக்கப்பட்ட ஏராளமான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு பயணிகள் இந்த உணவகங்களுக்கு விரும்பி வருவார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிசையில் செயல்பட்டு வந்த ஒரு உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குடிசைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, பிரான்ஸை சேர்ந்த சாபியான் என்ற பெண்மணி தனது கணவர் முஜூபருடன் இணைந்து நடத்தி வந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து சாபியான் கூறியதாவது, உணவகத்திற்கு ‘சீல்’ வைப்பது தொடர்பாக அதிகாரிகள் எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. உணவகத்திற்குள்தான் தன்னுடைய உடைமைகள் அனைத்தும் இருக்கிறது. அதை எடுக்கக்கூட எனக்கு அனுமதி தரப்படவில்லை.

முறையாக தகவல் தெரிவிக்காமல் எனது உணவகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் மீது பிரான்ஸ் தூதரகத்தில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...