உயிருக்கு பயந்து பதவி விலகிய பிரதமர்: பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுள்ளதாக தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் அழைப்பை ஏற்று, லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல்-ஹரிரி பிரான்ஸ் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல்-ஹரிரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவி விலகினார்.

பதவி விலகிய பின்னர் ஈரான் நாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், பாரிசில் தங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பிரான்ஸின் Élysée ஜனாதிபதி மாளிகை, கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மேக்ரான் சவுதி இளவரசர் Mohammed bin Salman மற்றும் Saad Harir-யிடம் தொலைப் பேசியில் பேசியதாகவும், அவர்களை பிரான்சிற்கு அழைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த அழைப்பு அரசியல் சம்பந்தமில்லாதது என்றும், நட்பின் அடிப்படையிலே அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் சவுதி இளவரசர் மற்றும் Saad Harir ஆகியோர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றிருப்பதாகவும், விரைவில் அவர்கள் பிரான்சிற்கு வருகை தந்து சில நாட்கள் தங்கி செல்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்