வரலாறு காணாத விலையேற்றத்தில் பாரீஸ் குடியிருப்புகள்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரலாறு காணாத வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸில் உள்ள மொத்த பகுதிகளிலும் விலை அதிகரிப்பு இதுவரையில்லாத அளவு உயர்ந்துள்ளது.

இதில் 12 பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு சதுர மீட்டர் கடந்த மாதம் €9,000 ஆக இருந்த நிலையில் தற்போது €9,165 ஆக மேலும் உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றம் வீடு வாங்கும் திறன் கொண்டவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

பாரீஸில் சொத்து வாங்க பலரும் முனைப்பு காட்டி வரும் நிலையில், விலையேற்றமானது வரும் மாதங்களில் தொடரும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் ஒரு சதுர மீட்டரின் விலை €8,510-ஆக இருந்தது, இது தற்போதைய நிலவரப்படி 5.5% வரை உயர்ந்துள்ளது.

கடந்த வருட ஏப்ரலிலும் இதே சதவீத அளவிலான விலையேற்றம் இருந்தது.

அதே போல பாரீஸ் தவிர்த்து பொர்தோக்ஸ் மற்றும் நான்டெஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...