13 வயதான சிறுமியுடன் உறவுக்கொள்ளலாம்: வருகிறது புதிய சட்டம்?

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
1433Shares
1433Shares
ibctamil.com

பிரான்ஸ் நாட்டில் 13 வயதான சிறுமியின் அனுமதியுடன் உறவுக்கொள்ளும் புதிய சட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவரை 28 வயதான வாலிபர் ஒருவர் கற்பழித்துள்ளார்.

இதன் விளைவாக சிறுமி கர்ப்பம் அடைந்து பிள்ளையும் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர்.

அதாவது, சிறுமியை வாலிபர் கட்டாயப்படுத்தி உறவுக்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நீதிபதியின் இத்தீர்ப்பு பிரான்ஸ் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி, குறிப்பிட்ட வயதுள்ள சிறுமிகளிடம் மட்டுமே உறவுக்கொள்ள வேண்டும் என தனிப்பட்ட சட்டம் இல்லை.

எந்த வயதாக இருந்தாலும், அவரை கட்டாயப்படுத்தி, பலவந்தமாக உறவுக்கொண்டால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாகும்.

நீதிபதியின் இத்தீர்ப்பை தொடர்ந்து 13 வயதான சிறுமியின் அனுமதி கிடைத்தாலும் அவருடன் உறவுக்கொள்ளலாம் என்ற சட்டம் இயற்றப்படவும் வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், உறவுக்கொள்ளும் வயது வரம்பினை வரையறை செய்யாவிட்டால் அது மோசமான சமூக சீர்கேடுகளை ஏற்படுத்திவிடும் என சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்